இன்று பிரேசில் நாட்டில் மோட்டோவின் ஜி7, ஜி7 ப்ளஸ், ஜி7 ப்ளே மற்றும் ஜி7 பவர் ஆகிய நான்கு போன்கள் அறிமுகமாகி உள்ளன.
ஆம், மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7 சீரிஸ் - மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
நான்கு போன்களும் ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்கக்கூடியவை. மோட்டோரோலா ஜி7 ப்ளஸ் போன் ஸ்நாப்ட்ராகன் 636 ப்ரோசசரில் இயங்கும். மற்ற மூன்று போன்களும் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ரோசசரில் இயங்குகிறது.
மோட்டோ ஜி7 பவர் போனின் பேட்டரி பேக்கப் 5,000 mAh ஆகும். மற்ற மூன்று போன்களும் 3000 mAh செயல்திறன் கொண்டதாகும். அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை விவரம்:
# மோட்டோ ஜி7 பிளஸ்: டீப் இன்டிகோ மற்றும் விவா ரெட் நிறங்கள், ரூ.24,320
# மோட்டோ ஜி7: செராமிக் பிளாக் மற்றும் க்ளியர் வைட் நிறங்கள், ரூ.21,360
# மோட்டோ ஜி7 பவர்: மரைன் புளு நிறம், ரூ.17,785
# மோட்டோ ஜி7 பிளே: டீப் இன்டிகோ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்கள், ரூ.14,215