திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது திமுக தொண்டர் ஒருவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் சில வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் இன்று ஜெயக்குமாரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளனர். அதன்படி ஜெயக்குமார் திருச்சி கண்டோண்ட்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு தினமும் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.