எதிர்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையாக தொடர்ந்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. காவல் துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நீதிமன்றம் சென்று நிரூபிப்போம்” என கூறியுள்ளார்.