கடந்த சிலநாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். நீதிமன்ற எச்சரிக்கை, தமிழக அரசின் அறிவுரைகளை மீறி போராட்டம் நடத்தும் இந்த அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் போராட்டம் செய்தவர்கள் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் இதுவரை விடுதலை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கோவையில் கைதுசெய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 11 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி வரை சிறையிலும், நெல்லையில் கைதான ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 பேருக்கு பிப்ரவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலிலும் வைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இனி போராட்டம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தற்காலிக ஆசிரியர்களை ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் பணியில் அமர்த்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.