Publish Date: Sat, 26 Jan 2019 (09:25 IST)
Updated Date: Sat, 26 Jan 2019 (09:27 IST)
காங்கிரஸ் என்ற ஜீரோவுடன் பிரியங்கா என்ற ஜீரோ இணைந்துள்ளதாகவும், இந்த ஜீரோக்களால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகள் தயங்கி வரும் நிலையில் அதிரடியாக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அதுமட்டுமின்றி மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து பிரியங்காவை போட்டியிட செய்யவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. அக்கட்சியின் தொண்டர்கள் ஆட்சியையே பிடித்துவிட்டது போல் உற்சாகமாகியுள்ளனர். இந்த நிலையில் பிரியங்காவின் அரசியல் வரவு குறித்து தெரிவித்த உபி முதல்வர் ஆதித்யநாத் யோகி, 'ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ரிசல்ட் ஜீரோதான். காங்கிரஸ் பெரிய ஜீரோ, அதில் பிரியங்கா உள்பட யார் இணைந்தாலும் ஒன்றும் வராது' என்று கூறியுள்ளார்.
webdunia
Publish Date: Sat, 26 Jan 2019 (09:25 IST)
Updated Date: Sat, 26 Jan 2019 (09:27 IST)