தமிழக வெற்றி கழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக இருந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வைஷ்ணவி, அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். செந்தில் பாலாஜி அவர்களின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தபின், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருட காலமாக பயணம் செய்தேன். தவெக இளைஞர்களுக்கான அரசியல் செய்யும் என எதிர்பார்த்தேன். ஆனால், இளைஞர்களுக்கான அரசியலை அந்தக் கட்சி முன்னெடுக்கவில்லை. அதனால், நான் அதிருப்தி அடைந்தேன்.
எனவே, இன்றைய தினம் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களின் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளேன்.
தவெகவை பொறுத்தவரை, பாஜகவின் இன்னொரு கிளை என்பதுதான் உண்மை. அதனால், இனிமேல் நான் திமுகவுக்காக பணி செய்யப் போகிறேன். என்னுடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே ஆண்டில் கட்சி தொடங்கி, அதன் நிர்வாகிகள் விலகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.