முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது விடுதலை ஆகி இருக்கும் நிலையில் ராஜீவ் காந்தியுடன் பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுரு என்பவரின் மனைவி பாலசரஸ்வதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ததை அடுத்து அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அந்த சம்பவத்தில் எனது கணவரும் பலியாகிவிட்டார். என்னையும் என் குழந்தைகளையும் சிறுவயதிலேயே தவிக்கவிட்டு காலமாகிவிட்டார். என்னை போன்று இன்னும் பல குடும்பங்களை இழந்து தவிக்கின்றனர்
என் கணவர் உயிரோடு இருந்திருந்தால் உயர் பதவியைப் பெற்று காவல்துறைக்கே ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் கொடுத்திருப்பார். ஆனால் அவரது மரணம் காவல்துறைக்கு மட்டும் இல்ல என்னுடைய குடும்பத்துக்கும் பேரிழப்பு
இந்த கொலைக்கு காரணமாக இருந்தவர்களை விடுதலை செய்ததை அடுத்து பலர் அறிக்கை வெளியிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் ராஜீவ் காந்தி இறந்த 16 பேர்களில் ஒருவருக்காவது ஒரு சொட்டு கண்ணீர் அவர்கள் விட்டது உண்டா? பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற குடும்பத்தினருக்கு இந்த சமுதாயம் என்ன பதில் சொல்கிற போகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்