Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிர்பிச்சை கேட்டு கெஞ்சிய தொழிலாளி; இரக்கமின்றி கொலை! – கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

Advertiesment
crime
, வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:13 IST)
கன்னியாகுமரியில் சாலையில் சென்ற கட்டிட தொழிலாளியை மர்ம ஆசாமி ஒருவர் இரக்கமின்றி தாக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜக்கமங்கல் அருகே உள்ள எறும்புக்காடு புல்லுவிளை பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலைக்காக சென்ற ராஜதுரை வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் ராஜதுரை சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் இடம் சென்று ராஜதுரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


அவருடைய உடலில் அவர் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் சாலையில் நடந்து சென்ற ராஜதுரையை பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

உயிர்பிச்சை கேட்டு ராஜதுரை அந்த இளைஞரை கையெடுத்து கும்பிடுவதும், ஆனால் அந்த இளைஞர் அதை பொருட்படுத்தாமல் ராஜதுரையை விரட்டி விரட்டி அடித்து கொன்றதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீஸார் பைக்கில் சென்ற ஆசாமி யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?