Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பணியில் 269 மருத்துவர்கள் மரணம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா பணியில் 269 மருத்துவர்கள் மரணம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!
, செவ்வாய், 18 மே 2021 (12:24 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் சிகிச்சையளித்த மருத்துவர்களே பலர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் இந்தியா பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் 269 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!