Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Advertiesment
ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
, செவ்வாய், 18 மே 2021 (12:21 IST)
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் மருந்து பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை தமிழகமே உற்பத்தி செய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்படும்‌ நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத்‌ தேவைப்படும்‌ ஆக்சிஜன்‌ தட்டுப்பாட்டைப்‌ போக்கும்‌ வகையில்‌, ஒரு நிரந்தரத்‌ தீர்வாக நம்‌ மாநிலத்திலேயே ஆக்சிஜன்‌ உற்பத்தி நிலையங்களைத்‌ துவக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌. இதுமட்டுமின்றி, மருத்துவ உயர்‌ தொழில்நுட்ப சாதனங்கள்‌, ஆக்சிஜன்‌ செறிவூட்டிகள்‌, தடுப்பூசிகள்‌ மற்றம்‌ கொரோனா தொடர்பான மருந்துகள்‌ உற்பத்தியை நம்‌ மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும்‌ தொழில்‌ கூட்டு முயற்சிகளை உருவாக்கவும்‌ உத்தரவிட்டுள்ளார்‌
 
இதனடிப்படையில்‌ தொழில்‌ துறையின்கீழ்‌ இயங்கும்‌ தமிழ்நாடு தொழில்‌ வளர்ச்சி நிறுவனம்‌, மேற்காணும்‌ அத்தியாவசிப்‌ பொருட்களை உற்பத்தி. செய்யும்‌ நிறுவனங்களுக்கு ஆதரவையும்‌, உதவிகளையும்‌ அளிக்கும்‌ என்றும்‌, குறைந்தபட்சம்‌ 50 கோடி ரூபாய்‌ முதலீடு செய்யும்‌ நிறுவனங்களுடன்‌, டிட்கோ நஇறுவனம்‌ கூட்டாண்மை அடிப்படையில்‌ இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும்‌ வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக்‌ கருத்துகளை 3-6-202டக்குள்‌ கோரியுள்ளது.
 
அல்வாறு பெறப்படும்‌ விருப்பக்‌ கருத்துகள்‌ ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன்‌ தடுப்பூசிகள்‌ மற்றும்‌ உயிர்‌ காக்கும்‌ மருந்துகள்‌ உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில்‌ நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா குணமாகும் என மண்ணெண்ணெய் குடித்தவர் பரிதாப பலி!