சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

Siva
திங்கள், 20 அக்டோபர் 2025 (08:30 IST)
இன்று இந்தியாவின் முக்கியப் பண்டிகையான தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தேவைப்படும் வெடிபொருட்களில் சுமார் 90 விழுக்காடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
 
பல சவால்களுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு சுமார் ரூ.7,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டு ரூ.6,000 கோடி விற்பனையை விட ரூ.1,000 கோடி அதிகம் ஆகும். 
 
கடந்த பத்து நாட்களாக பட்டாசு விற்பனை அபரிமிதமாக இருந்தது. குறிப்பாக, டெல்லியில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டன.  
 
ஆனால் அதே நேரத்தில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் பட்டாசுகள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments