சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

Siva
திங்கள், 20 அக்டோபர் 2025 (08:23 IST)
வங்க கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் இன்று தீபாவளி தினத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தற்போது கன மழை பெய்து வருவதாக தகவல்களை உள்ளன.
 
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல பகுதிகளில் இன்று மிதமான மழையுடன் கூடிய இடி மின்னல் ஏற்பட மிகவும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், அத்துடன் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அயோத்தியில் 26 லட்சம் தீபங்கள்! மீண்டும் கின்னஸ் சாதனை! - யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

சுயசார்புடன் தீபாவளியை பெருமிதமாக கொண்டாடுவோம்! - நாட்டு மக்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments