Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

Prasanth Karthick
வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:26 IST)

தற்போது விடுமுறை காலத்தையொட்டி சென்னை - கன்னியாக்குமரி இடையே கூடுதல் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

ஏப்ரல், மே மாதங்கள் பள்ளிகள் விடுமுறை என்பதால் மக்கள் குடும்பமாக பல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில்களையே விரும்புவதால் தற்போது ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக பலரும் பல மாவட்டங்களுக்கு பயணிக்கும் சூழல் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை கணக்கில் கொண்டு சென்னை - கன்னியாக்குமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

அதன்படி, சென்னை - கன்னியாக்குமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06089) ஏப்ரல் மாதம் 10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக கன்னியாக்குமரியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 11 மற்றும் 18ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் இரவு 8 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments