Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Advertiesment
Train

Mahendran

, வெள்ளி, 21 மார்ச் 2025 (16:41 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாரலப்பள்ளி என்ற நகரில் இருந்து கன்னியாகுமரிக்கு திருவண்ணாமலை வழியாக  3 மாதங்களுக்கு  சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தெலங்கானா மாநிலத்தின் சாரலப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து கோடை கால சிறப்பு ரயில் (எண் - 07230) புதன்கிழமை இரவு 9.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் குண்டூர், ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, மற்றும் காட்பாடி வழியாக பயணித்து, மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
 
அதன் பிறகு, மதியம் 12.42 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் வழியாக சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
 
அதேபோல், கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து கோடை கால சிறப்பு ரயில் (எண் - 07229) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும். முன்னதாக பயணித்த அதே வழித்தடம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அதே நாளில் மாலை 6.00 மணிக்கு சென்றடையும். பின்னர், மாலை 6.02 மணிக்கு புறப்பட்டு சாரலப்பள்ளி ரயில் நிலையத்தை சனிக்கிழமை காலை 11.40 மணிக்கு அடையும்.
 
இந்த சிறப்பு ரயில் சாரலப்பள்ளி - கன்னியாகுமரி வழித்தடத்தில் ஏப்ரல் 2, 9, 16, 23, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
 
அதேபோல், கன்னியாகுமரி - சாரலப்பள்ளி வழித்தடத்தில் ஏப்ரல் 4, 11, 18, 25, மே 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ரயில் சேவை நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!