தமிழக அரசு விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
2018-2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதன்மீதான விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக செயல் தலவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு,க.ஸ்டாலின் குரங்கணி காட்டுத்தீ குறித்து கொண்டு வந்த கவன் ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்த பின் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது தொடர்பாக கருணாஸ், தனியரசு, தமிமும் அன்சாரி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வர முற்பட்டனர்.
ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும், ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கினால் சமூகம் சார்ந்த கலவரங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று குற்றம்சாட்டினர்.