Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு..

Advertiesment
2G Spectrum
, திங்கள், 19 மார்ச் 2018 (17:29 IST)
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா  மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

 
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
அந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளதாக ஏ.என்.ஐ எனப்படும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, சிபிஐ தரப்பிலும் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரவ் மோடியை மறக்கவே ஸ்ரீதேவி மரணம் : போட்டு உடைத்த ராஜ் தாக்கரே