Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 நாட்கள் பரோல் கேட்கும் இளவரசி - எதற்கு தெரியுமா?

Advertiesment
15 நாட்கள் பரோல் கேட்கும் இளவரசி - எதற்கு தெரியுமா?
, புதன், 24 அக்டோபர் 2018 (15:46 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரி இளவரசி பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரின்  உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு நால்வரும் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இதில், சசிகலா  மட்டும் 2 முறை பரோலில் வெளியே வந்து சென்றார். அதுவும் 2வது முறை அவரின் கணவர் நடராஜன் இறந்த போது 15 நாட்கள் பரோலில் வந்தவர், பரோல் முடியும் முன்பே சிறைக்கு கிளம்பி சென்றார்.
 
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரரை பார்க்க 15 நாட்கள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பித்துள்ளார். இந்த பரோல் மனு அதிகாரிகளின் பரிசீலனையில் இருக்கிறது என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜ்நாத் சிங் தலைமையில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புதிய குழு –மி டூ எதிரொலி