Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜ்நாத் சிங் தலைமையில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புதிய குழு –மி டூ எதிரொலி

Advertiesment
ராஜ்நாத் சிங் தலைமையில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புதிய குழு –மி டூ எதிரொலி
, புதன், 24 அக்டோபர் 2018 (15:43 IST)
பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான மி டூ இயக்கம் பரவலான விவாதத்தை உருவாகியுள்ளது. மி டூ வின் எழுச்சியால் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தனது பதவியை இழந்துள்ளது.

இதனையடுத்து தற்போது மத்திய அரசு தற்போது அலுவலகங்களில் பெண்கள், தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது மற்றும் அதனை முறையிடுவதற்கான ஒரு குழுவினை ஒவ்வொரு அலுவலகங்களிலும் உருவாக்குதல் எனப் பல்வேறு அம்சங்களை முன்வைத்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, மேனகா காந்தி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு மூன்று மாதக் காலங்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாரூக்கான் ,கஜோலின் காதல் படம் 1200வது வாரம்....