Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்காவில் வேலை.. சம்பளம் ரூ.4.30 கோடி..!

Advertiesment
சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்காவில் வேலை.. சம்பளம் ரூ.4.30 கோடி..!

Siva

, வியாழன், 5 டிசம்பர் 2024 (17:15 IST)
சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவருக்கு அமெரிக்காவில் ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்ததாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வரலாற்றில் மிக அதிக சம்பளத்தில் வேலை கிடைத்த மாணவர் இது என்றும் கூறப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பிளேஸ்மெண்ட் தொடங்கியுள்ள நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தேர்வு நடத்தின. இந்த தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், சென்னை ஐஐடியில் நடந்த பிளேஸ்மெண்டில் மாணவர் ஒருவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இதுவே சென்னை ஐஐடியில் படித்த மாணவருக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைத்த அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தை அங்கமான ஜேன் ஸ்ட்ரீட் டிரேடிங்  நிறுவனத்தால் அவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் கட்டமாக அவர் ஹாங்காங் பிரிவில் பணியமத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவரின் பெயரை சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிடவில்லை. மேலும், ஏராளமான மாணவர்கள் இந்த ஆண்டு பிளேஸ்மெண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஐடி நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமண நாளில் அம்மா, அப்பாவை கொலை செய்த ஒரே மகன்.. அதிர்ச்சி சம்பவம்..!