Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உட்காரும் உரிமை சட்டத்தை பின்பற்றாத கடைகள்! 31 கடைகளுக்கு அபராத நோட்டீஸ்!

Advertiesment
Textile

Prasanth Karthick

, வியாழன், 5 டிசம்பர் 2024 (15:39 IST)

ஊழியர்கள் பணிக்கு இடையே அமர்ந்து கொள்ள இருக்கை அளிக்கும் சட்டத்தை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டில் துணிக்கடைகள் உள்ளிட்ட ஊழியர்கள் நின்று வேலை பார்க்கும் கடைகளில் அவர்கள் அமர இருக்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. இதன் அடிப்படையில் சமீபத்தில் தமிழக அரசு “உட்காரும் உரிமை” Right to Sit சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

 

அதன்படி கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அமர்ந்து கொள்ள இருக்கை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் பல கடைகளில் இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படுவது இல்லை என்ற புகார்களும் உள்ளது.

 

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள துணிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது பல கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கை தராமல் இருந்துள்ளனர். இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் 31 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவில்லாத அரசாங்கத்தின் கீழ் மக்கள் இருப்பதால்தான் இவ்வளவு சிரமம்: ஜெயகுமார்