ரியல் தீரன் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு உதவ விருப்பமா? இதோ விபரம்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (23:17 IST)
ராஜஸ்தான் கொள்ளையர்களால் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரியல் தீரன் ஹீரோ பெரியபாண்டியனுக்கு தமிழக அரசு ஒரு பெரிய தொகையை நிதியுதவி செய்துள்ளது. இருப்பினும் அவரது உயிருக்கு விலை மதிப்பே கிடையாது.

இந்த நிலையில் பெரியபாண்டியனின் குடும்பத்தினர்களுக்கு நிதியுதவி செய்ய விரும்பும் பொதுமக்களுக்காக ஒரு ஏற்பாட்டை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பெரியபாண்டியன் குடும்பத்துக்கு பொதுமக்கள் உதவ காவல்துறை சார்பில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன் கணக்கு எண் அறிவிக்கப்பட்டது.

பெரியபாண்டியன் குடும்பத்தினர்களுக்கு உதவி  செய்ய விரும்பும் பொதுமக்கள் எச்.டி.எப்.சி வங்கிக் கணக்கு எண் 50100168000768, வங்கி கிளை பி.ஹெச் ரோடு கிளை என்ற கணக்குக்கு பொதுமக்கள் பணம் செலுத்தலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதாது, கணிசமான தொகையை பணமாகவும் அக்கவுண்டில் போட வேண்டும் என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments