Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீரன் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்; மதுரவாயல் போலீஸ் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை!

Advertiesment
தீரன் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்; மதுரவாயல் போலீஸ் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை!
, புதன், 13 டிசம்பர் 2017 (08:57 IST)
மதுரவாயல் காவல் ஆய்வாளர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த போது அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில்  சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த நவம்பர் 16ஆம் தேதி, சென்னை கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில், 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இக்கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
 
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நாதுராம், தினேஷ் சௌத்ரி ஆகியோர் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவர்களைப் பிடிக்க, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி தலைமையிலான குழுவினர் ராஜஸ்தான் விரைந்தார். அங்கு கொள்ளையர்களை பிடிக்கும் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் காவல்துறையினர் உரிய ஒத்துழைப்பு அளிக்காததன் காரணமாகவே இந்த துயர சம்பவம் நடைபெற்றது என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர்களை தேடும் பணியில் அறிவியல்பூர்வ உபகரணங்கள்: அமைச்சர் ஜெயகுமார்