ரூ.510 கோடி மத்திய அரசு ஒதுக்கினால் …என்ன செய்ய முடியும்? ராமதாஸ் கேள்வி

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (17:12 IST)
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?  என மருத்துவர் ராமதாஸ்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளாதாவது :

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?  கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் , தனது மற்றொரு பதிவில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 35,198 பேருக்கு கொரோனா தொற்று, 2,381 பேர் உயிரிழப்பு என்ற புள்ளிவிபரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவே இத்தகைய பேரழிவை சந்திக்கும் போது, நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள #சமூகஇடைவெளி தான் ஒரே தீர்வு. ஊரடங்கை கடைபிடிப்போம்; உயிர் காப்போம்! என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments