Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

J.Durai

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (12:36 IST)
செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும்  செப்டம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். 
 
இந் நிலையில் சென்னை வடபழனியில்  அமைந்துள்ள தனியார் மாலில்,  ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு,  அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர். 
 
இந் நிகழ்வினில் கலந்துகொண்ட 
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது.......
 
உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. சென்னை வந்து 13 வருடம் ஆகிவிட்டது, நல்ல படம் பண்ணனும், நல்ல இயக்குநரோடு, நடிகரோடு நடிக்க ஆசைப்பட்டேன். அந்த வகையில் இந்தப்படம் கிடைத்தது மகிழ்ச்சி. தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி. நான் பார்டி போனால் விஜய் ஆண்டனியின்  மஸ்காரா பாட்டுக்குத் தான் ஆடுவேன்,  இப்போது அவர் படத்தில் நடனமாடியிருப்பது மகிழ்ச்சி.  இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.  தனா சார் படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார்.
 
இயக்குநர் தனா பேசியதாவது…...
 
என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை, அந்த வகையில் தான் இந்த ஆக்சன் படம் செய்துள்ளேன், விஜய் ஆண்டனி சாரை  இதில் வித்தியாசமாகப் பார்க்கலாம். ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார்.
 
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…...
 
இந்தப்படத்தைத் தயாரித்த நண்பர் ராஜாவுக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் இயக்குநர் தனா அருமையான மெசேஜ் வைத்திருக்கிறார். ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
 
பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான  காதலும் கலந்த திரைக்கதையில், அனைவரும் ரசிக்கும் வகையிலான, திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார்.
 
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடை வேளைக்குப்பிறகு  நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"