உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை ஒரு நபர் வன்கொடுமை செய்ய முயன்றபோது சிறுமியை குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல பகுதிகளிலும் பெண்கள், சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர நபரிடமிருந்து சிறுமியை குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ள செய்து பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவரை ஒரு நபர் வன்கொடுமை செய்வதற்காக அங்குள்ள காட்டிற்குள் கொண்டு சென்றுள்ளார். சிறுமி அழுவதை கண்ட அங்கிருந்த குரங்குகள் அந்த நபரை கடித்து, அடித்து தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
அங்கிருந்து தப்பிய சிறுமி வீடு வந்து தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த அடையாளம் தெரியாத நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K