Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து உங்களுக்காகப் பயணிப்பேன்- முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
தொடர்ந்து உங்களுக்காகப் பயணிப்பேன்- முதல்வர் ஸ்டாலின்
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (22:46 IST)
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் என்ற சுயசரிதைப் புத்தகத்தை ( பாகம் -1) காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தனிவிமானம் மூலம் சென்னை வந்து முதல்வரின்  நூலை வெளியிட்டு வாழ்த்தினார்.  

இந்நிலையில் இ ந் நூல் குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகப் பிறந்த நாள் முதல், திராவிட முன்னேற்றக் கழகமே என் உயிர்மூச்செனச் செயல்பட்டு வருகிறேன்.

13 வயதில் கழகக் கொடி பிடித்தது முதல் இன்றுவரையில் என்னை முழுவதுமாக மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

23 வயதுவரையிலான என் அனுபவங்களை - நான் சந்தித்த போராட்டங்களை - எதிர்கொண்ட அடக்குமுறைகளை - என்னைச் செதுக்கிய தோல்விகளை - ஊக்கம் தந்த வெற்றிகளை - பொறுப்புணர்ந்து ஆற்றிய கடமைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள இந்தத் தன்வரலாற்று நூலை எழுதி, முதல் பாகத்தை இன்று வெளியிட்டிருக்கிறேன்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த கொள்கைத் தடத்தில் என் பயணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்களுக்காகப் பயணிப்பேன்.

தோழனாக - உடன்பிறப்பாக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டு பாச மழை பொழிவதால் என்றும் நான் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனுக்கு உதவ தயார் - மத்திய அரசு அறிவிப்பு