Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன? ஜோதிடர் பாலாஜி விளக்கம்

Advertiesment
ரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன? ஜோதிடர் பாலாஜி விளக்கம்
, ஞாயிறு, 21 ஜூலை 2019 (20:33 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு தகவலை ஜோதிடர் பாலாஜி கூறியதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியால் கொந்தளித்து எழுந்த ரஜினி ரசிகர்கள் ஜோதிடர் பாலாஜியை திட்ட ஆரம்பித்தனர். இதனால் ஜோதிடர் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் 
 
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு ரஜினி குறித்து தான் உண்மையில் கூறியது என்ன என்பதை விளக்கமாக கூறியுள்ளார் ஜோதிடர் பாலாஜி. அதாவது அந்த தனியார் தொலைக்காட்சியில் தான் கூறியது என்னவெனில் வரும் 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல் நலக்குறைவால் ஒரு சின்ன பிரச்சனை ஏற்படும் என்றும், அதாவது சளி போன்ற பிரச்சனை மட்டுமே ஏற்படும் என்றும், அந்த நேரத்தில் தனுசு, மகர, கும்ப ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த சின்ன பிரச்சனை ஏற்படும் என்றும், ஆனால் அதிலிருந்து அவர் மீண்டு வந்து அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார் என்றும், அதன் பிறகு அவருடைய அரசியல் பிரவேசம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
 
webdunia
ஆனால் அந்த தொலைக்காட்சியினர் அதில் நான் கூறியவற்றை வெட்ட வேண்டியதை வெட்டி விட்டு ஒளிபரப்பியதால் சர்ச்சைக்கு உரியதாக மாறியது என்று அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் தான் நீண்ட வருடமாக ரஜினி ரசிகன் என்றும் தன்னுடைய பர்சில் கூட ரஜினிகாந்த் புகைப்படம் வைத்துள்ளதாகவும், தான் கூறியதை தவறாக எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்ததை குறித்து தான் வருத்தப்படவும் இல்லை என்றும் இனிமேலாவது தான் கூறியதை புரிந்துகொண்டால் போதும் என்பதே தனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் சமூகப்பணியில் அன்னை தெரசாவின் சாயல்: வைகோ பாராட்டு