Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரமின் "கடாரம் கொண்டான் " திரைவிமர்சனம்!

விக்ரமின்
, வெள்ளி, 19 ஜூலை 2019 (15:50 IST)
நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை இங்கே காணலாம். 



 
இயக்கம்: ராஜேஷ் எம். செல்வா
தயாரிப்பு: ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் , ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் 
நடிகர்கள்: விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி ஹசன் 
இசை: ஜிப்ரான் 
ஒளிப்பதிவு : சீனிவாஸ் குப்தா
 
கதைக்கரு: 
 
கடந்த 2010 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான ‘பாயிண்ட் பிளாங்க்’ என்ற படத்தின் ரீமேக் தான் கடாரம் கொண்டான். ‘பாயிண்ட் பிளாங்க்’ படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் சூப்பர் ஹட் அடித்தது அதனை கருத்தில் கொண்டு  தற்போது  தமிழிலும் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா. 
 
படத்தின் பெரும்பாலான கதை வாசு(அபி ஹாசன்) மற்றும் கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவி ஆதிரா(அக்க்ஷரா ஹாசன் ) ஆகிய இருவரை சுற்றியே நகர்கிறது. வாசு மருத்துவராக ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அந்த நேரத்தில் தான் கே.கே என்கிற கடாரம் கொண்டான் (விக்ரம்) சில மர்ம நபர்களால் துரத்தப்படுகிறார் அந்த நேரத்தில் அவருக்கு விபத்து நேரிடுகிறது. பின்னர் வாசு பணிபுரியும் அதே மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார். 
 
வாசு கர்ப்பமான மனைவி ஆதிராவை தனியே வீட்டில் இருக்க வைத்துவிட்டு, நைட் ஷிப்ட் வேலைக்கு செல்கிறார். அப்படி ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்குதிரும்பும்போது, அபியை அடித்துவிட்டு அக்‌ஷராவை ஒருவர் கடத்த, பிறகு விக்ரமை அந்த மருத்துவமனை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும், என மிரட்டப்படுகின்றார். பின்னர் வாசு வேறு வழியில்லாமல் விக்ரமை வெளியே கொண்டு வர, அதன் பின் நடக்கும் அதிரடி திருப்பங்களே இப்படத்தின் மீதி கதை. 
 
கதைக்களம்
 
கே.கே என்கிற கடாரம் கொண்டான் ஒரு முன்னாள் சீக்ரெட் ஏஜெண்ட் . பின்னர் அவர் டபுள் ஏஜென்டாக மாறி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அவரை துரத்திய நேரத்தில் வாசு சிகிச்சை கொடுத்து வருவதால் அவரது மனைவியை கடந்து சென்றுவிடுகின்றனர். மனைவியை காப்பாற்ற மருத்துவமனையிலிருக்கும் கே.கே வை தப்பிக்க செய்யவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார் வாசு. 
 
பின்னர் வாசு, தனது மனைவியை காப்பாற்றினாரா, கடாரம் கொண்டனுக்கும் வாசுவிற்கும் என்ன தொடர்பு, கடாரம் கொண்டானின் உண்மையான பின்னணி என்ன என்பதை ஆக்க்ஷன், செண்டிமெண்ட் கலந்து செல்கிறது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்.
 
 
படத்தின் ப்ளஸ்:
 
கெத்தான , மாஸான ஸ்டைலில் விக்ரம் வழக்கம் போல ஸ்கோர் செய்துள்ளார்.ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்க்ரீன் பிலே போன்றவை  ஹாலிவுட் தரத்திற்கு ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு இருக்கிறது. அக்‌ஷரா ஹாசனின் நடிப்பு பாராட்டக்கூடியதாக அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகள் படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை பக்காவாக பொருந்தியுள்ளது. 
 
படத்தின் மைனஸ்:
 
 
அபி ஹாசன் மற்றும்  அக்ஷரா ஹாசனின் போர்ஷன்  அதிக பிரேம்கள் வைத்திருப்பது கொஞ்சம் சலிப்பை தருகிறது. படத்தின் முதல் பாதி விக்ரம் வரும் காட்சிகளை தவிர்த்து மற்ற காட்சிகள் மிகவும் இழுவையாக இருக்கிறது. படத்தில் பெரிய டுவிஸ்ட், சஸ்பென்ஸ் என எதுவுமில்லை .
 
இறுதி அலசல்: 
 
ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, வெறும் கெட்டப்பை மட்டும் வைத்து ஒரு படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க செய்துவிட முடியாது என்பதற்கு கடாரம் கொண்டான் ஓர் உதாரணம். 
 
கடாரம் கொண்டான் படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு 2.8\5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"லொஸ்லியவை வெறுத்த ஆர்மிஸ்" காரணம் இதுதான் - வீடியோ!