Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!

Advertiesment
Finance Minister Nirmala Sitharaman

J.Durai

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:36 IST)
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது....
 
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றோம். பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் இன்று பங்கேற்றேன். 
பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களுக்கு 7 விஷேசமான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொழில் துறையினரிடம் எடுத்து கூறும் விதமாக உதய்பூரில் முதலில் கூட்டம் நடத்தினோம். அதேபோல், கோவையிலும் நடத்தினோம்.
 
எங்கெல்லாம் சிறுகுறு தொழில் கிளாஸ்டர் இருக்கின்றதோ அந்த இடங்களில் சிட்பி வங்கி திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. Msme கிளஸ்டர் இருக்கும் இடங்களில் சிட்பி வங்கி திறக்கப்பட இருக்கின்றது.
தொழில் முனைவோரின் பிரச்சினைகளை கேட்டறிய முதல் முறையாக , துறை அதிகாரிகளை வரச்சொல்லி மனுக்களை வாங்கி பிரச்சினைகளை தீர்க்க கோவையில் நடந்த இக்கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
8 துறைகள் மற்றும் இரு வங்கி அதிகாரிகள் நேற்று மனுக்களை பெற்று தொழில் துறையினரின் பிரச்சினைகள் குறித்து விளக்கினார்கள்.
 
ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் நேற்று ஹோட்டல் துறையினர் தரப்பில் மனு கொடுத்து இருக்கின்றனர். 
நேற்றைய கூட்டத்தில் பன்னுக்கு tax இல்லை,க்ரிம் போட்டால் tax  என ஜனரஞ்சகமாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் பேசினார். அதில்  தவறு ஒன்றுமில்லை.
ஆனால் ஒவ்வொரு உணவுக்கான வரி குறித்து அமைச்சர்களின் குழுமம் தான் அதில் ஆராய்ச்சி செய்து முடிவு செய்தார்கள். இந்த செய்தி வெளிப்படையானது. பெரியவர் கேள்வி கேட்டார்.
ஜனரஞ்சகமாக அவர் பேசுவதால் ஜிஎஸ்டி பற்றி பேசியதற்கு பதில் இதுதான். இந்த சம்பவத்தை ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டு விட்டார் என செல்லாம். விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை.ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக அமைச்சரும் உறுப்பினர் ஆக உள்ளார். எந்த ஒரு முடிவும் எதிர்ப்புக்கு இடையே இறுதி செய்யப்பட வில்லை. எல்லாரும் ஒப்புக்கொண்டுதான் இறுதி செய்யப்பட்டது. கேரள அமைச்சர் மட்டும் ஒரு முறை லாட்டரி தொடர்பாக எதிர்ப்பு பதிவு செய்தார். அதை தவிர வேறு எந்த முடிவுக்கும் இதுவரைக்கும்  எதிர்ப்பு இல்லை. இதில் தனி நபராக எந்த முடிவும் செய்ய முடியாது.நேற்று பல அமைப்புகள் பல கோரிக்கை மனுக்களை கொடுத்து இருக்கின்றனர்.Gst 
கமிட்டி அவற்றை பரிசீலனை செய்து இருக்கின்றது.Gst வரும் முன்பும் மெடிக்கல் இன்சூரன்ஸ்க்கு வரி இருந்தது. Gst வந்த பின்பு இது சர்ச்சை ஆக்கப்பட்டது. மதிப்பு கூட்டப்பட்ட பொருளுக்கும் கச்சாவிற்கும் ஓரே விலையா என கேட்கின்றனர்.
இதெல்லாம் Gst கவுன்சிலில் தான் இருக்கின்றது. வரி தொடர்பான விடயங்களில் குத்து மதிப்பாக பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
 
மேலும், பிற மாநிலங்களில் 
gst இல்லாமல் பம்ப் விற்பனை செய்வதால் பாதிப்பா என்பது தொடர்பான கேள்விக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.கள்ள மார்க்கெட்டில் லைட்டர் நுழைந்தால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் பதிலளித்தார்.
 
முத்ரா லோன் குறித்து நேற்று பேசிய புள்ளி விபரம் சரியா என்ற கேள்விக்கு. 34 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில் 20 லட்சம் முத்ரா அக்கவுன்ட் என்பது சரியா என கேள்வி கேட்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்து சொல்கின்றேன்.
 
கொப்பரை தொடர்பாக என்னிடம் கையில் எந்த தகவலும் இல்லை எனவும், தமிழகத்தில்  இருந்து பெறப்படும்  வரி முழுமையாக தமிழகத்திற்கு வருவதில்லை என்ற கேள்விக்கு:
 
அரசில் இருந்து யார் இப்படி கேட்கின்றனர். ஜிஎஸ்டி தொடர்பான 
வருவாய் ஒவ்வொன்றும் முழுமையாக கணக்கில் இருக்கின்றது. 100 ரூபாயில் 72 ரூபாய் மாநில அரசுகளுக்கு  போகின்றது. பைனான்ஸ் கமிசன் சொல்வதை நாங்கள் செய்கின்றோம்.
நிறைய கொடுக்கின்றோம்.
நிறைய வேண்டும் என்றால் பைனான்ஸ கமிஷனிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் அவர்கள் பங்கை கேட்டால் என்னாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பைனான்ஸ் கமிஷன் சொல்லியதில் ஒரு பைசா கூட குறைக்க வில்லை எனவும், கவுன்சிலில் பொருள்வாரியாக வருவாய் குறித்து பேசப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
முதல்வர் வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்க்க சென்று இருப்பது வரவேற்கதக்கது. அதில் என்ன முடிவுகள் தொழில்கள் வருகின்றது என்பதை பார்க்கலாம் என்றவர், கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அந்த அமைச்சகம்தான் முடிவு எடுப்பார்கள் எனவும், பா.ஜ.க கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றபடும் என தெரிவித்தார்.
வங்கிகளில் கரன்ட் அக்கவுன்ட் உட்பட எந்த அக்கவுன்டிற்கும் கட்டணம் விதிப்பதில்லை. ஏழைகளிடம் இருந்து இதுபோன்று அக்கவுன்ட்டில் இருந்து பணம் வசூலித்தால் என்னிடம் சொல்லுங்கள். கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், ஆயிரம் புகார்கள் இருந்தாலும் அதை சொல்லுங்கள்
மின்மம் பேலன்ஸ் தொடர்பாக 
வெளிப்படையாக விளம்பரம் போட சொல்கின்றேன் என்றார்.விஷ்வகர்மா திட்டத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
இது குலத்தொழில் இல்லை. இதில் ஜாதி இல்லை. முடி திருத்துபர், படகு தயார் செய்பவர் உட்பட 18 வகையான தொழில் செய்பவர்கள் இதில் இருக்கின்றனர். இதில், மத்திய அரசின் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி திராவிட அரசியல் செய்கின்றனர் என்றார்.பள்ளிகளில் வெட்டி கொல்கின்றனர்.
ரோட்டில் சாதி கலவரம் செய்கின்றனர்.குடி தண்ணாரில் மலம் கலக்கின்றனர். இவற்றுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தான் சமத்துவம், சமூகநீதியா?
இந்தி பேசித்தான் ஆக வேண்டும் என நாங்கள் சொல்ல வில்லை. நல்ல திட்டங்கள் வருவதை தடுக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா அட்மிசனுக்கு ஒவ்வொரு எம்.பி யும் என்னிடம் கேட்கின்றனர். உங்கள் தொகுதி மக்களுக்கு மட்டும் கே.வி அட்மிசன் வேண்டும். ஆனால் இந்தி எதிர்ப்பு மட்டும் செய்கின்றனர் என்றவர்,
மணிப்பூர் விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சியிடம் கேளுங்கள். உக்ரைன் போகும் பிரதமர் ஏன் மணிப்பூர் போகவில்லை என கேட்கின்றனர்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்திற்கு பதில் கொடுக்க வந்த போது பிரதமரை பேச விடாமல் கத்தினர்.காங்கிரஸ் கட்சி எப்பேர்பட்ட கட்சி. மன்மோகன் சிங்கை வைத்து பஞ்சாப் மக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்கள் என கூறினார். சென்னை மெட்ரோ ரயில் முதல் பேஸ் ஆரம்பித்து தினமும் 4 லட்சம் பேர் இப்போது அதில் பயணிக்கின்றர். இரண்டாவது பேஸில் 118 கி.மீ உள்ளது. இதில் சென்ட்ரல் கவர்மன்ட் 10 சதவீதம் பிராஜெக்ட் காஸ்ட் மட்டும் கொடுக்கும். மொத்த லோன் மாநில அரசினுடையது. மொத்த வேல்யூ 63,464 கோடி ஆகும்.
முழு விடயத்தை சொல்லாமல் அரை பொய் , அரை நிஜம் என பேசுகின்றனர். முழுமையான விடயத்தை வெளிப்படுத்துங்கள். இது மாநில அரசு ஸ்கீம் 
என 2018 ல் ஒப்புக் கொண்டீர்களா இல்லையா? என கேள்வி எழுப்பினார்.வெளிநாட்டில் போய் பேச்சு சுதந்திரம் இருக்கின்றது என்பதற்கு,பாரத நாட்டிற்கு விரோதமனவர்களை சந்திக்கின்றார் ராகுல்காந்தி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு நாட்டில் இருப்பவர்களை போய் பார்க்கின்றார். வெளிநாட்டில் நமது நாட்டிற்கு எதிரானவர்களை சந்தித்து எதிர்கட்சி தலைவர் பேசுவது சரியில்லை.திமுக தனது தோழமை கட்சி வெளிநாட்டில் போய் பேசுவதை கேட்க மாட்டீர்களா ? நாட்டுக்கு விரோதமான செயல்களை கேட்க மாட்டார்கள்? தேச பக்தி உங்களிடம் இல்லையா? எதிர்கட்சி தலைவராக ராகுல் இருப்பது நாட்டின் கேடுகாலம் எனவும் விமர்சித்தார்.சீத்தாராம் யெச்சூரி இறந்தற்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தவர், 'எனக்கு பல வருடம் முன்பு ஜே.என்.யூ வில் படித்தவர். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தீவிரமாக உழைத்தவர் .அவர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TNPSC குரூப்-2 தேர்வு எதிரொலி.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!