Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்!

J.Durai

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:12 IST)
தனியார் அறக்கட்டளை சார்பில் மக்கள் மருந்தகத்தை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திறந்து வைத்தார்.
 
இந் நிகழ்வின்போது செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர் தெரிவித்ததாவது.....
 
'மலிவு விலையில் மருந்துகள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எனபதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
 
மார்கெட் விலையை விட பாதி்விலைக்கு ,
குறைவான விலையில் இங்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது.
 
இந்தியா முழுவதும் 
இது பயனுள்ள திட்டமாக செயல்படுத்தபடுகின்றது.
 
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக இன்று கொண்டாடப்படுகின்றது.
 
நாளை மறு தினம் கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கின்றேன்.
 
இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதார திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவங்கினர். தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்றது.
 
மத்திய கல்விதுறை அமைச்சர் , தமிழக  முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். ஆனால், அதை நடைமுறை படுத்த வேண்டும்  என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை.
 
புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.
 
தாய் மொழி கல்வியை ஊக்குவிப்பது தேசிய கல்வி கொள்கை. இன்று கூட மத்திய கல்வி அமைச்சர் டிவிட் போட்டிருக்கின்றார்.
 
யூ டியூபர் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து பா.ஜ.க 
கமிட்டி தலைவர் பதில் சொல்வார்.
 
AI தொழில் நுட்பங்களை நிறுத்த முடியாது. நாளிதழ், டிவி தாண்டி செல்போன் வந்திருக்கின்றது. இப்பொது ஏ ஐ வந்திருக்கின்றது. ஆக்கப்பூர்வமான விடயங்ளுக்கும் பயன்படும். முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும்.
 
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேலிக்குறியாக இருக்கின்றது. சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுகின்றது.
 
என்ஐஏ அலுவலகம் கோவைக்கு வரவும் வாய்ப்பு இருக்கின்றது.
 
மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர்.
 
இதை முறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது. 
இதற்காக
புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கின்றது. இதற்காக பொது மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது.
 
செய்தியின் தன்மை, பொது விடயங்களுக்கு ஆக்கப்பூர்வமான செய்திகளை எடுத்து செல்வதாக இருக்க வேண்டும். யூ டியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
 
தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும் 69 யூ டியூப் சேனல்களை முடக்கி இருக்கின்றோம்.
 
விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதற்கு வாழ்த்து. அவர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை.
 
மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.
ஊடகங்களிலதான் 
இது ஊதி பெரிதாக்கப்படுகின்றது என தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய உறவுக்கார இளைஞர்: போக்சோ சட்டத்தில் கைது..!