Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TNPSC குரூப்-2 தேர்வு எதிரொலி.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Advertiesment
TNPSC Exam

Senthil Velan

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:33 IST)
தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
 
தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 2,763 தேர்வு மையங்களில் தேர்வர்கள்‌ எழுத உள்ளனர்‌. குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது. 
 
தேர்வினை கண்காணிக்கும்‌ பொருட்டு துணை ஆட்சியர்‌ நிலையில்‌ பறக்கும்‌ படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும்‌ ஆய்வு அலுவலர்‌ ஒருவரும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ மூலம்‌ நியமிக்கப்பட்டுள்ளார்‌. 

 
தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும்‌ செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் நாளை (14.09.24)  பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுக்கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை: திருமாவளவன்