தள்ளாத வயதிலும் இசை மீது கொண்ட ஆர்வத்தால் ஆல்பம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் மூதாட்டி இசை கலைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மனித வாழ்வில் சோகம், காதல், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்காட்ட இசை ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. பலருக்கு இசை குறித்த பெரிய புரிதல்கள் இல்லாவிட்டாலும் கூட இசையை கேட்க எந்த புரிதலும் தேவைப்படுவதில்லை. அப்படியாக உலகம் முழுவதும் உள்ள இசை காதலர்களில் ஒருவராக தனது ஆல்பத்தை 106வது வயதில் வெளியிட்டுள்ளார் இசை கலைஞர் கொலெட் மெஸ்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞரான கோலெட் மெஸ் இசை மீது கொண்ட ஆர்வத்தால் முன்னதாக இரண்டு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது 106 வயதாகும் அவர் பல இடர்பாடுகளுக்கிடையே தனது மூன்றாவது ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். உலகில் மிகவும் வயதான இசைக்கலைஞரின் ஆல்பமாக அவரது புதிய ஆல்பம் சாதனை படைத்துள்ளது. அவரது இசை மீதான காதலுக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.