Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் மனைவி இறந்த 5 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவர்!

Advertiesment
காதல் மனைவி இறந்த 5 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவர்!
, திங்கள், 20 ஜூலை 2020 (20:29 IST)
சென்னையை அடுத்த திருநின்றவூர் என்ற பகுதியில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட ஐந்தே நாட்களில் அவரது பிரிவின் சோகம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
திருநின்றவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் இதனை அடுத்து பவித்ரா தனது தாயார் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் திடீரென பவித்ரா, தனது தாயார் வீட்டில் கடந்த 15ஆம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து தகவலறிந்த அரவிந்தராஜன் மனைவியை நினைத்து கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 
 
இந்த நிலையில் மனைவி இறந்து ஐந்து நாட்களே ஆகியுள்ள நிலையில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அரவிந்தராஜன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த உருக்கமான பதிவு ஒன்றில் மனைவியின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் எனது சாவுக்கு பவித்ராவின் உறவினர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அரவிந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தற்கொலை