Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரக்கு ஊற்றிக்கொடுத்த மனைவி… தயாராக இருந்த கள்ளக்காதலன்! வரப்போவதை அறியாத அப்பாவி கணவன்!

Advertiesment
சரக்கு ஊற்றிக்கொடுத்த மனைவி… தயாராக இருந்த கள்ளக்காதலன்! வரப்போவதை அறியாத அப்பாவி கணவன்!
, ஞாயிறு, 19 ஜூலை 2020 (11:57 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணவருக்கு அளவுக்கதிகமாக சரக்கு ஊற்றிக்கொடுத்து மட்டையாக்கி அவரை கள்ளக்காதலன் துணையோடு கொலை செய்துள்ளார் மனைவி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் தேவராஜ் மற்றும் புஷ்பா. இவர்கள் இருவரும் மைசூரில் மிளகுத் தோட்டத்தில் தங்கள் இரு குழந்தைகளுடன் வேலை செய்துள்ளனர். இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த, 7-ம் தேதி கல்வராயன்மலை வனப்பகுதியில் தேவராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி குறித்து தெரியவந்துள்ளது. மைசூரில் வேலை பார்த்த போது புஷ்பாவுக்கு மணி என்ற இளைஞரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்கு திரும்பிய நிலையிலும் மணி மற்றும் புஷ்பாவின் காதல் தொலைபேசி வாயிலாக தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் இதையறிந்த தேவராஜ் மனைவியைக் கண்டித்து சண்டை போட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட கணவனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் புஷ்பா.  இதற்காக அவருக்கு 6 ஆம் தேதி இரவு அளவுக்கதிகமாக சரக்கை ஊற்றிக் கொடுத்துவிட்டு மணியை வரவழைத்துக் கொலை செய்துள்ளார். அதன் பின் மணியுடன் வந்த சுரேஷோடு சேர்ந்து பைக்கில் வைத்து பிணத்தை கல்வராயன்மலை வனப்பகுதியில் வீசியுள்ளனர். இந்த கொலை வழக்கு சம்மந்தமாக போலீஸார் மணி மற்றும் புஷ்பாவைக் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திராணி இருந்தா நேரா மோதுங்க.. இப்படி பண்ணாதீங்க! – போலி ட்வீட்டுக்கு பாஜக கண்டனம்!