Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Mahendran
செவ்வாய், 19 மார்ச் 2024 (17:17 IST)
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை திடீரென கணவர் குத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் இன்று கணவன் மனைவி இருவரும் ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர். அப்போது இருவரும் நெடுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்ததாகவும் அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த கணவன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தியதாகவும் மனைவி ரத்தம் வெள்ளத்துடன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடிய நிலையில் மனைவியை ஓட ஓட விரட்டி கணவன் தாக்கியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் கத்தியால் குத்திய கணவரை அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். கணவரால் கத்தி குத்துப்பட்ட மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையில் சேர்த்து உள்ளனர் என்பதும் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

பரபரப்பாக இயங்கும்  சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை அவரது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

GST Reforms: அன்றே சொன்ன ராகுல்காந்தி! இன்றைக்கு செய்த பாஜக அரசு! - வைரலாகும் ட்வீட்!

வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments