Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டை குழம்பு சமைக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்.. போதையில் செய்த கொடூரம்..!

Advertiesment
Egg Masala

Mahendran

, செவ்வாய், 19 மார்ச் 2024 (10:11 IST)
ஹரியானா மாநிலத்தில் போதையில் இருந்த கணவன் தனது மனைவி முட்டை குழம்பு சமைக்க மறுத்ததால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லாலன் யாதவ் என்ற 35 வயது நபர் தினசரி குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வருவதாக தெரிகிறது. அதேபோல் சம்பவத்தன்று போதையில் வந்த லாலன் யாதவ் தனது மனைவியிடம் முட்டை குழம்பு சமைத்து தருமாறு கேட்ட நிலையில் போதையில் வந்த கணவனுக்கு சமைத்து தர முடியாது என்று அவருடைய மனைவி கூறியதாக தெரிகிறது.

இதனால் போதையில் இருந்த லாலன் யாதவ் ஆத்திரமடைந்து மனைவியை சுத்தியல் மற்றும் பெல்ட்டால் கொடூரமாக தாக்கியதாகவும் ரத்த வெள்ளத்தில் இருந்த அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிகிறது

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் லாலன் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலன் யாதவுக்கு  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் அற்ப காரணத்திற்காக மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசாவோடு போர் முடியாது.. ரஃபாவையும் தாக்குவோம்! – இஸ்ரேல் முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி!