Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக சார்பில் விருப்ப மனு..! தொடங்கி வைத்த பிரேமலதா..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (17:10 IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தேமுதிக சார்பில் இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
மக்களவை தேர்தலில் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது.
 
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. கூட்டணி குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்..! தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு..!!
 
இந்த நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் என இரண்டு நாட்களாக விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, கழக நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments