விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், நாட்டிலுள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து, ஆளுங்கட்சியான பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
39 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சத்திஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஸ் பாகர் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா- ஷிமோகா தொகுதியில் போட்டியில் மோட்டியிடுகிறார். ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். சசிதரூர்- திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். அதேபோல், கே.சி.வேணுகோபால் -ஆலப்புழாவில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகிறது.
காங்கிரஸ் நேற்று மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.