Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 17 April 2025
webdunia

குடிபோதையில் கிணற்றில் விழுந்த கணவர் ... மனைவி என்ன செய்தார் தெரியுமா?

Advertiesment
chennai
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (15:56 IST)
சென்னை பல்லாவரம் அருகேயுள்ள  அனகாபுத்தூர் சாந்தி நகரில்  வசித்துவருபவர்  பாலாஜி. இவர் தண்ணீர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அளவுக்கதிமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் மனைவி நாகம்மா, பாலாஜியை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்குக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் மேல் ஏறி உட்கார்ண்ட்து கொண்டு மனைவியுடன் பாலாஜி சண்டையிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து கோபமடைந்த மனைவி வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். அப்போது மது போதையில் இருந்த பாலாஜி  நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
 
பின்னர் சிறிதுநேரம் கழித்து கணவரின் சப்தம் கேட்காததால் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கணவர் 35 அடி கிணற்றுக்குள் விழுந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சையடைந்து கூச்சலிடுள்ளார்.
 
அவரது சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தாம்பரம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்த்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்1 மணி போராட்டத்திற்கு பின்னர் பாலாஜியை கயிற்றில் கட்டி மேலே கொண்டு வந்தனர். இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி, கட்சி, பதவி எதுவும் வேண்டாம்; சொத்து மட்டும் போதும்: ஜெ தீபாவின் டீலிங்?