Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உமா மகேஸ்வரிவை கொன்றது எப்படி? கார்த்திகேயனின் நடுங்க வைக்கும் வாக்குமூலம்

Advertiesment
நெல்லை
, செவ்வாய், 30 ஜூலை 2019 (13:36 IST)
உமா மகேஸ்வரி மற்றும் இருவரை கொன்றது எப்படி என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
கார்த்திகேயனை போலீஸார் விசாரித்த போது, அவர் தெரிவித்ததாவது, நான் மட்டும்தான் 3 பேரையும் கொலை செய்தேன். கொலைக்கு முன்னர் உமா மகேஸ்வரியை வீட்டை நோட்டமிட்டு ஒரு நாள் காரை தேவாலயம் அருகே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றேன். 
 
அப்போது உமா மகேஸ்வரியின் கண்வர் என்னை வீட்டிற்குள் அழைத்தார். உள்ளே சென்ற பின்னர் எனது தாய் சீனியம்மாள் அரசியல் வாழ்க்கையை அழித்துவிட்டாய் என சண்டை போட்டேன். உடனே உமா என்னை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு கூறினார். ஆத்திரம் அடங்காமல் உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தினேன். 
இதைதடுக்க வந்த உமா மகேஸ்வரியின் கணவரையும் குத்தினேன். அவர் படுக்கை அறைக்குள் ஓடினார் துரத்திக்கொண்டு அவரை கொன்றேன். அதன் பின்னர் வெளியே வந்து உமா மகேஸ்வரியை மீண்டும் கொன்றேன். 
 
இதனிடையே வீட்டிற்குள் வந்த வேலையாளையும் சமயறைக்கு இழுத்து சென்றேன், இருப்பினும் ஒரு பயத்தில் பாத்திரத்தில் அடித்துக்கொலை செய்தேன். பின்னர் கைரேகை தடயங்களை அழித்தேன் என கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ தீபாவுக்கு என்னாச்சு ?– மருத்துவமனையில் அனுமதி !