Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆற்றில் மர்மம்? உமா மகேஸ்வரி வழக்கில் கொலையாளியை நெருங்கிய போலீஸார்!

Advertiesment
ஆற்றில் மர்மம்? உமா மகேஸ்வரி வழக்கில் கொலையாளியை நெருங்கிய போலீஸார்!
, திங்கள், 29 ஜூலை 2019 (13:29 IST)
உமா மகேஸ்வரி கொலையில் கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் தாமிரபரணி ஆற்றில் தேடி வருகின்றனர். 
 
திமுக பிரமுகரும் நெல்லை முன்னாள் மேயருமான உமா மகேஸ்வரி கடந்த 23 ஆம் தேதி அவரது வீட்டில் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடன் அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர்களும் கொலை செய்யப்பட்டனர். 
 
இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச்செயலாளர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை போலீசார் விசாரணை செய்து வருவதாக வருவதாக கூறப்படுகிறது. 
webdunia
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், ரகசிய இடத்தில் நடைபெறும் இந்த விசாரணைக்கு பின்னர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
கொலைக்கு பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். பறிமுதல் செய்யப்பட்ட கார் உமா மஜேஸ்வரியின் வீட்டின் முன்பு அடிக்கடி சென்று வந்தது அருகில் உள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளதாம். 
 
அதோடு, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள கொலையாளிகள் தமிரபரணி ஆற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகித்து ஆயுதங்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் மேன் vs வைல்டு – பேர் கிரில்ஸுடன் அட்வன்சர் பயணம் !