Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

Advertiesment
thangam thennarasu

Mahendran

, திங்கள், 3 மார்ச் 2025 (18:35 IST)
தமிழக அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் ஒன்பது லட்சம் கோடி," என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
 
இதற்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவின் மொத்த கடன் ₹181/74 லட்சம் கோடி. அப்படி என்றால், நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு?" என்று திருப்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து அவர் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ? 
 
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள். 
 
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. முக ஸ்டாலின்  அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான  போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு