Publish Date: Fri, 11 Nov 2022 (08:51 IST)
Updated Date: Fri, 11 Nov 2022 (08:54 IST)
வங்கக் கடலில் தோன்றிய உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்ததால் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டாலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று வேலை நாள் என்பதால் சென்னை பல சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த மழையின் அளவு குறித்த தகவல் தற்போது வந்துள்ளது அது குறித்து பார்ப்போம்
நுங்கம்பாக்கம் - 3 செ.மீ
மீனம்பாக்கத்தில் - 3 செ.மீ
காட்டுப்பாக்கம் - 5 செ.மீ
வில்லிவாக்கம் - 5 செ.மீ
பூந்தமல்லி - 4 செ.மீ
தரமணி - 4 செ.மீ
நந்தனம் - 3 செ.மீ