வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றிய நிலையில் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை அடுத்து தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக மழை வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் நாளை அதாவது நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும்போது வட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது