தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.