மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட தொழிலதிபருக்கு முக்கிய பதவியை முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக வழங்கியுள்ளார்.
கோவை ஸ்ரீ அன்னபூர்வ அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினார்.
இது குறித்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து அதன் பின்னர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் வீடியோ பகிரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினராக அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இதற்கான பணிகளுக்கான ஆணையை அவரிடம் வழங்கிய நிலையில், சீனிவாசன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்