சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அதற்குப் பின்னர் திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில தலைவர்களை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் அடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் வரும்போது அவரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பின்போது அதிமுகவில் இணைய அவர் முயற்சி எடுப்பார் என்றும், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய மூவருமே மீண்டும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து பிரதமர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற பாஜக தலைவர்களை சந்தித்து வருவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.