நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் எட்டாம் தேதி லண்டன் செல்ல இருப்பதாகவும், அங்கு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய - பிரிட்டன் பொருளாதாரம் மற்றும் நிதி சார் உரையாடல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாதம் லண்டன் செல்ல உள்ளார்.
அங்கு அவர் பிரிட்டன் நிதி அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் தொடங்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் கூறப்பட்டது.
அதன்படி பேச்சு வார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில், தற்போது இந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை ஆறாவது பெரிய முதலீட்டாளராக பிரிட்டன் உள்ள நிலையில், இரு தரப்பு வர்த்தகத்தின் மதிப்பு கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் 21 21 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர் லண்டன் பயணம் இந்தியாவுக்கு மிகப்பெரிய பயனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.