மதுரையில் கும்பகோணம் ஐய்யர் சிக்கன் என ஒரு ஹோட்டலில் விளம்பரம் வெளியானது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேல வாசி வீதியில் இயங்கி வரும் மிளகு என்னும் ஹோட்டலை ஜூடோ ஆம்ஸ்ட்ராங் மற்றும் சாம் தேவாரம் ஆகிய இருவரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், கும்பகோணம் ஐய்யர் பில்டர் காப்பி போல கும்பகோணம் ஐய்யர் சிக்கன் என தங்களது ஹோட்டலுக்கு விளம்பரம் செய்துள்ளனர் இந்த ஹோட்டல் தரப்பினர். சமூக வலைத்தளங்களில் வைரலானது இந்த விளம்பரம்.
வைரலான கையோடு வில்லங்கத்தையும் உருவாக்கியுள்ளது. அசைவத்தை உண்ணாத சமூகத்தினரின் பெயரை அசைய உணவிற்கு வைத்து விளம்பரம் தேடியதாக அந்த ஹோட்டல் முற்றுகையிடப்பட்டது.
விபரீதத்தை உணர்ந்த ஜூடே ஆம்ஸ்ட்ராங் என்பவர் அங்கிருந்து தப்பிவிட்டார். சிக்கிக்கொண்ட சாம் தேவாரமோ மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்கும் அளவிற்கு நிர்பந்தத்தில் தள்ளப்பட்டார். மேலும் காவல் துறையினரும் ஹோட்டல் நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தது.
ஏற்கனவே சோமேட்டொ, ஊபர் ஈட்ஸ் ஆகிய ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் மத ரீதியான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த விளம்பரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.