Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்காவா ப்ளான் பண்ணி வலைத்து போட்ட கமல்: கோட்டை விட்ட அதிமுக!

Advertiesment
Kamal Haasan
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (09:40 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தேர்தல் நிபுணர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் கைகோர்க்க உள்ளதாக தெரிகிறது. 
 
பிரசாந்த கிஷோர் பாஜக, ஜக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்து வெற்றி பெற செய்தவர். இவர் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் அமைத்து தருவது பெரும்பாலும் வெற்றியையே தந்துள்ளது.
 
இவரது வியூகங்களால் ஆட்சி அமைத்தவர்கள் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அந்த வகையில் இவர் அடுத்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு உதவ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
webdunia
ஆம், மக்கள் நீதி மய்யத்துடன் பிரசாந்த் கைகோர்க்க உள்ளது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என நம்பலாம். 
 
இதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி செல்ல பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் உதவும் என தெரிகிறது. பிரசாந்த் கிஷோர் அதிமுகவுடன் கைகோர்க்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரே அதை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸொமாட்டோ விவகாரம் – அமித் சுக்லாவை எச்சரித்த காவல்துறை !